உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் மற்றும் பட்டியல் மூலம் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் விபரத்தை தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் எச்.டி.கமல் பத்மசிறியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்றத்தின் முழு ஆசனங்களின் எண்ணிக்கையில் நூற்றுக்கு 50 வீதத்துக்கு அதிகமான எண்ணிக்கையை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினாலோ அல்லது சுயாதீன குழுவினாலோ பெற்றுக்கொள்ள முடியாமல் போயிருக்கும்.
அந்த சந்தர்ப்பத்தில் உள்ளுராட்சி மன்றத்தின் முதல் அமர்வில், நகர முதல்வர் மற்றும் பிரதி நகர முதல்வர் ஆகியோர் உறுப்பினர்களின், வாக்குகளின் ஊடாக தெரிவுசெய்யப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் வெளியிட்ட, மேலதிக பட்டியலில் பெயரிடப்படுகின்ற உறுப்பினர்களின் பட்டியலை அடுத்த வாரத்துக்குள் பெற்றுக்கொடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி முதல் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிகாலம் ஆரம்பமாக உள்ள நிலையில் மக்கள் தங்கள் விருப்பத்துக்குரிய உறுப்பினர்களை பெயரிடுவதை அரசியல் கட்சிகள் உறுதிப்படுத்த வேண்டும் என பெப்பரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.