- துயிலுரிந்த தேசத்தின் வழிவந்த இனமல்லவா பாரதம்
அரிசி திருடியதற்காய அடித்துக் கொல்வதொன்றும் புதுமை இல்லையேமாடறுக்கத் தடை போட்ட
தேசத்தில்
மலிவாக அறுக்கப்படுகிறது
மனிதத்தின் தலைகள்விலங்கை பலிகொடுத்து வழிபட்டீகள்
சிரித்துக்கொண்டன சிலைகள்
மனிதரை அறுக்கும் போதும்
மௌனமாய் கிடக்கிறது
வாழ்க மதம்..!சாதி வெறியில் எரித்தீர்கள்
பலரை
உண்ணும் உணவிலும்
உடுக்கும் துணியிலும்
கீழ் ஜாதியின் வியர்வை அப்பிக்கிடப்பதை
மறந்து…
வாழ்க ஜாதீ…..!!ஆகப் பெரும் கள்ளரை
ஆட்சியில் அமர்த்திவிட்டு
அரிசி திருடியவனை அடித்து
கொன்றீர்கள்
வாழட்டும் உங்கள் அறியாமை…!அடேய் விலாசமறியாத வீணர்களே..!
ஆடம்பர உணவகத்தில்
தின்று தின்று கொழுத்தவர்களே..!
அங்கே உணவு சமைப்பவன்
எந்த ஜாதி தெரியுமா..?தாழ்த்தப்பட்டவனின்
குருதியில் குழைத்து செய்த ஜனநாயகம்
யாருக்கு வேண்டும்புனித இரத்தத்தால்
கட்டியெழுப்பப்பட்ட பாரதத்தை
உமிழிநீர் கொண்டு அர்ச்சிக்காதீர்கள்
உன்மத்தர்களே..!கோவணம் கட்டி கொடி நிமிர்த்திய
தேசம் – இன்று
அம்மணம் விரும்பும்
அடிமட்ட மனிதத்தின் கரங்களில்
கட்டாய் மிதக்கும் கள்ள நோட்டில்
கதறி அழுகிறது காந்தியம்இருபத்தியோராம் நூற்றாண்டிலும்
மனிதத்தை தேடி அலைந்து
மடிந்து போகட்டும்
பாரதத் தாய்– அனாதியன்-
பாரத தேசமா..? பாவிகள் தேசமா..?
