மனிதத்தின் மறுபக்கம்
மிருகத்தையும் தாண்டி
தாண்டவமாடுகிறது
உண்மைக் காதலை அறுத்தெறிந்து
அம்மணமாக்கி வீதியில்
சாதியைக் காட்டி சாகடித்தீர்கள்
தாக நீரை தடுத்துவைத்து
காவேரி நதியில் நாமம் பூண்ட
உங்களில் எத்தனை கண்கள்
காமத்தைக் கடந்ததாயிருக்கும்
காட்டேரிப் பேய்களை விட
நாட்டேரி நாய்களே விஷம் நீங்கள்
நினிவேப் பட்டனம் தோற்றுவிட்டது
நீள்கின்ற அம்மணக்
கொலைகளின் ஆதிக்கத்தால்
அரிசியைத் திருடியதற்கு
அம்மணக் கொலை முடிவென்றால்
அரசியலைத் திருடி ஆணவத்தில்
அண்டம் பிடிக்கும் அறிவிலிகளுக்கு ?
திருடியவன் கையை வெட்டவும்
காமத்தில் இணைந்தவனை
கல்லெறிந்து கொள்ளவும்
தப்பு செய்தால் தண்டனை கொடுக்கவும்
உங்களில் யாரடா உத்தமன் ?
ஒருவருமில்லை நீங்கள் பாவிகளே
பசியோடு அவன் தவிக்க
காரணம் யார் இந்த அரசியல் தானே
உங்கள் ஆவேசம் அவர்கள்
பக்கம் திரும்பட்டும் முட்டாள்களே
சிலைகளுக்குப் பால் வார்த்து
பட்டாடை உடுத்திடும் உங்களை
பக்த்ரர் என்று அழைதுவிட முடியாது
கால அழிவின் நாள்
குறிக்கப்பட்டுள்ளது நரகத் தீயில்
புழுக்களின் மத்தியில்
சர்ப்பம் உன் வாயினால் போய்
உன் அங்கங்களை கிழித்தெறியும்
அன்று சாவது மேலாயிருக்கும்
ஆனாலும் மரணம் உனை சுவைக்காது
உங்கள் வழிகளை மாற்றுங்கள்
இனியும் தாங்காது உலகு
படைத்தவன் ஒருவன் இருக்கிறான்
பதில் மீட்டும் நாள் விரைவில்
பாவத்தட்டுகளை எரிக்க வருவான்
பாவிகளே பாரத தேசத்தின்
குரூரக் கொடி அரங்கேறி விட்டது
ஈமக் காட்டினில் உனக்கான
குழிகளும் ஆயத்தம் விழித்துக்கொள்
நாளை நீயும் வீழ்த்தப்படலாம்
வன்னியூர் கிறுக்கன்