சிரியா தேசத்தின் மேல்
இராக்கதன்களின் ராஜ்யம்
சென்னியில் முனிவு கொண்டு
முற்றுகையிட்டு நிற்கிறது
கனல் நிறைந்த கல்லெடுத்து
குழவி மீதெறிகிறார்கள்
திகில் நிறைந்து சிரியா தேசம்
ஈழ வரலாற்றுக் கொலையை
கண் முன் காட்டியதால்
ஈழத் தாயும் கதறித் துடிக்கிறாள்
மிடி பிடித்த ஈனப்பிரவிகளின்
படைவிரிப்பில் பலியாவது
பால் மணம் மறவா
பச்சிளம் பிஞ்சுக் குழந்தைகளே
பாங்கன் பாசம் வைத்து
பழிவாங்கியது அந்தக் காலம்
வித்தகமற்ற பித்தர்களின்
களங்கம் நிலங்களில் சிதறி
பிஞ்சு உடல்களையும் சிதைக்கிறது
வெகுளிகளின் இந்தக் காலம்
கார்கோள் மீண்டும் பீறிட்டெழாதா ?
ஏதம் கூடி மாண்டவர் குறைவு
போதம் இழந்து வாழ்வோர் நிறைவு
களிப்புக்கு சரீரம் கிழித்து
கறை படிந்த காடையர்களே
உன் காலம் முடியும் நாளும் வரும்
பலனை உனக்கே திரும்பத் தரும்
– வன்னியூர் கிறுக்கன்