கண்டி உள்ளிட்ட இலங்கையின் தென்பகுதி மற்றும் மலையகப் பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் ஆங்காங்கே இடம்பெறுகின்றன.
கண்டி – பூஜாப்பிட்டிய பிரதேசத்தில் இன்று புதன்கிழமை குண்டு ஒன்று வெடித்துள்ளதாகவும் அறியமுடிகிறது. பூஜாப்பிட்டிய பொலிஸார் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆனால் சேதவிபரங்கள் எதனையும் வெளியிட அவர்கள் மறுத்துள்ளனர்.
அதேவேளை காயமடைந்த நிலையில் இன்று காலை முதல் மாலை வரை 10 பேர் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்திய அதிகாரி ஒருவர் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் அக்குறனை 20க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது. ஆனால் பொலிஸார் அதனை உறுதிப்படுத்தவில்லை.
மாத்தளை பிரதேசத்திலும் வன்முறைகள் இடம்பெற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட இணைய சேவைகள் அனைத்தும் இலங்கையில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில்இ தகவலை உறுதிப்படுத்துவது சிரமமாக இருப்பதாக செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
அதேவேளை கண்டி – திகனஇ தெல்தெனியஇ பல்லேகல பிரதேசங்களில் இன்று புதன்கிழமை பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் அந்தப் பிரதேசங்களில் பதற்றம் நிலவுவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.