எந்தவித அச்சமும் இன்றி இலங்கைக்கு வருமாறு வெளிநாட்டவர்களிடம் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் கருத்து வெளியிட்டார்.
இந்த வருடத்தில் 2.5 மில்லியன் வரை சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் துரதிஷ்டவசமாக கண்டியில் வன்முறை சம்பவத்திற்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.
எனினும் தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும்இ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு வெளிநாட்டவர்கள் வருகைத்தர முடியும்.
சிறிய சம்பவத்தினால் சுற்றுலா துறையினுள் சில குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாகவும்இ எனினும் சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. இனியும் ஏற்படாது எனவும்இ நாடு பாதுகாப்பாக உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.