பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு பிரிவுகளும் ஆதரவளிப்பது முக்கியம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளிக்குமாறுஇ சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனஇ தனக்கு ஆதரவாக உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 44 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உத்தரவிடுவார் என்று எதிர்பார்ப்பதாகவும் கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 106 உறுப்பினர்களும்இ அந்தக் கட்சியின் பக்கமுள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு 1 உறுப்பினரும் உள்ளனர்.
எனினும்இ அதுரலியே ரத்தன தேரரும்இ விஜேதாச ராஜபக்சவும்இ தற்போது சுதந்திரமான உறுப்பினர்களாகச் செயற்படும் நிலையில்இ ஐதேகவுக்கு 105 உறுப்பினர்களே இருக்கின்றனர்.
அதேவேளைஇ கூட்டு எதிரணிக்கு 52 உறுப்பினர்களும்இ சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு 44 உறுப்பினர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.