பங்களாதேஷ் கிரிக்கட் அணிக்கு நேர்ந்த கதியே கூட்டு எதிர்க்கட்சியினருக்கும் நேரும் என அமைச்சர் ஹரிசன் தெரிவித்துள்ளார்.மிஹிந்தலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறும் போது; பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான யோசனையில் கையொப்பமிடும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குஇ சுதந்திர கிண்ண டுவன்ரி20 போட்டித் தொடரில் பங்களாதேஷ் அணிக்கு நேர்ந்த கதியேயாகும்.
நம்பிக்கையில்லா தீர்மான யோசனைக்கு யார் கையொப்பமிட்டுள்ளனர் என்பது முகநூலில் காணப்படுகின்றது.கையொப்பமிட்டவர்கள் பற்றி நாட்டு மக்களுக்கு தெரியும். ஐக்கிய தேசியக் கட்சியில் யாரும் இதில் கையொப்பமிடவில்லை.நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றி அறிவிப்பதற்கு முகநூல் கிடையாது.நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகரிடம் வழங்கிஇ அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னரே எத்தனை பேர் இதில் கையொப்பமிட்டுள்ளனர் என்பது பற்றி அறிந்து கொள்ள முடியும்.கூட்டு எதிர்க்கட்சியின் ஒரு தொகுதியினர் வெளிநாடு சென்றுள்ளனர் அவர்கள் கையொப்பமிடுவது பற்றி இன்னும் தீர்மானிக்கவில்லை.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம்இ பிரதமர் மேலும் தூய்மைப்படுத்தப்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.