தமிழீழத்தின் முன்னை நாள் தொழில்னுட்ப பிரிவுப்பொறுப்பாளரும் தமிழ்த்தேசியத்தின் தூண்களில் ஒருவருமான குணாளன் மாஸ்டர் அவர்கள் 29-03-2018 அன்று சுவிஸ் நாட்டில் காலமானார் என்பதை கண்ணீருடன் தெரிவித்துக்கொள்கிறோம். மேலதிக விபரம் பின்னர் வெளியிடப்படும்.
விடுதலைப்போராட்டத்தில் பல முகம் தெரியாத அர்ப்பணிப்பாளர் இருந்திருக்கின்றார்கள் எந்தக்கட்டத்திலும் எதையும் எதிர்பாராமல் தேசவிடுதலை என்ற உன்னத குறிக்கோளுடன் இன்னும் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அப்படியொரு தேச விடுதலைப்பற்றாளன் தான் குணாளன் மாஸ்டர்.
1983 முதல் 1998 வரையில் தமிழீழ போராட்டத்தின் பல வரலாற்றுப்பதிவுகளின் சாட்சியங்கள் இவரின் கைகளினால் பதிவு செய்யப்பட்டவையே. அதன் தொடர்ச்சியாக இறுதிக்காலம் வரை இவரின் பங்கு தொடர்ந்து கொண்டேதான் இருந்திருந்தது .
சுவிசு நாடு சென்றும் தனது இனத்திற்கு ஏற்பட்ட இனஅழிப்பின் சாட்சியாக ஜெனிவா மனிதவுரிமைகள் மையத்திற்குச் சென்று தனது வாக்குறுதியை பதிவு செய்திருந்தார்.