இன்றைய காலகட்டத்தில் தலைவலி என்பது மிக சாதாரணமான ஒன்றாகிவிட்டது. தொடர்ந்து டிவி, செல்போன் மற்றும் கணினியை பார்த்துக் கொண்டே இருப்பதாலும் கூட தலைவலி உண்டாகிறது. அதுமட்டுமல்லாம ஒற்றை தலைவலி கூட இன்று பலருக்கும் இருக்கும் ஒன்றாக உள்ளது. ரத்தநாளங்களை அழுத்தமாகத் துடிக்கச் செய்கிற, தலையின் ஒருபகுதியில் மட்டும் வலியை உண்டாக்குகிற, வாந்தி அல்லது வாந்தி எடுக்கும் உணர்வுடன் கூடிய, சூரிய ஒளியைக் கண்டால் அதிகரிக்கிற தலைவலியை ஒற்றைத் தலைவலி என்கிறார்கள்.
பெண்களுக்கு மாதவிடாய்க்கு முன்னர் தலைவலி வருகிறது. கருத்தடை மாத்திரைகளாலும், புளித்த வெண்ணெய், காரம், புளி, உப்பு, எண்ணெய், உணவு சாப்பிடாமல் இருப்பது போன்றவற்றாலும் தலைவலி அதிகரிக்கிறது.
பருவநிலை மாற்றம், வெயில், வேலைப்பளு, மனஅழுத்தம் இப்படி பல காரணங்களால் அடிக்கடி தலைவலிக்கு ஆட்படுவதுண்டு. ஆனால், அப்போதைக்கு வலி நிவாரணி அல்லது மாத்திரை போட்டுவிட்டு அப்படியே விட்டுவிடுகிறோம்.
ஆனால், செலவே இல்லாமல் வந்த தலைவலியை உடனடியாகப் போக்கும் வைத்திய முறையை நம்முடைய முன்னோர்கள் பின்பற்றி வந்தனர்.அந்த இயற்கையான வழிமுறையை நாமும் பின்பற்றினால் அடிக்கடி தலைவலி வராமல் பார்த்துக் கொள்ள முடியும். வந்த தலைவலியையும் உடனடியாக சரிசெய்ய முடியும்.
நம் மூக்கில், இரண்டு துவாரங்களையும் சுவாசித்து உள்ளிழுக்கவும் காற்றை வெளியிடவும் உபயோகிக்கிறோம். தலைவலி வரும் போது, வலது துவாரத்தை மூடி, இடது துவாரம் வழியாக சுவாசிக்க வேண்டும்.
ஐந்தே நிமிட நேரத்தில் தலைவலி காணாமல் போய் விடும்.மிகவும் களைப்பாக இருக்கும்போது, இடது துவாரத்தை மூடி, வலது துவாரம் வழியாக சுவாசிக்கவும். சிறிது நேரத்தில் களைப்பு போய் விடும்.