கடந்த புதன்கிழமை (04.04.2018) சாவகச்சேரி இந்துக்கல்லூரி மீதும் கல்லூரியின் பெறுபேறுகளை காட்சிப்படுத்தும் பேருந்துக் கான காத்திருப்பு நிலையம் மீதும் தாக்குதல் மேற்கொண்ட காவாலிகள் சாவகச்சேரி பொலிசாரின் துரித நடவடிக்கையால், அடையாளம் காணப்பட்டு கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலை ப்படுத்தப்பட்டனர்.
ஞானப்பிரகாசம் பிரசாந் , யோகேஸ்வரன் மிருநளன் .. முன்னிலைப்படுத்தப்பட்ட விசமிகள் நீதிமன்றத்தில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியதையடுத்து பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து வழக்கு ஆனது இம்மாதம் 24 ம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. குறித்த ஞானப்பிரகாசம் பிரசாந் என்பவர் கடந்தவருடம் சாவகச்சேரி பாடசாலையில் ஒழுக்கமற்ற மாணவராக இனங்காணப்பட்டு பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புற்று நீதிமன்றம் ஊடாக நடவடிக்கைக்கு உட்பட்டவர் என்பதும் பாடசாலையில் இருந்து இடைவிலக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது தந்தையார் தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள ஒரு அரச அலுவலகத்தின் பணியாளருமாவார்.
யோகேஸ்வரன் மிருநளன் என்பவர் அண்மைய நாட்களில் தெருச்சண்டைகளில் ஈடுபடுட்டு கத்திவெட்டுக் காயத்திற்கு உட்பட்டவர் என்றும் அரச மருத்துவமனையில் மருத்துவம் பெற்றால் காவல்த்துறையினரின் நடவடிக்கைகளுக்கு உட்படவேண்டிவரும் என அறிந்து தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பெற்றுஉள்ளார். இவருக்கு எதிராகவும் பல்வேறு சமூகவிரோத செயல்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் நிலுவையில் உள்ள, இவரது தாயார் இலங்கையின் முன்னணிக் காப்பீட்டு நிறுவனத்தின் தென்மராட்சி பிராந்திய அலுவலகத்தின் பிரதிநிதியாவார். அரச சொத்தினை சேதப்படுத்தியதற்கு அமைவாக குறித்த விசமிகள் மீது சட்டநடவடிக்கைகள் தொடரப்படும் எனவும் அண்ணளவாக 5 இலட்சம் அளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவற்றிற்குரிய அரச நடமுறைகள் பின்பற்றப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் காவல்த்துறை மற்றும் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.