சென்னை: திரைப்பட இயக்குனர்கள் இணைந்து தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை என்ற புதிய அமைப்பை தொடங்கி உள்ளனர். இந்த அமைப்பு குறித்து நடிகர் சத்யராஜ்இ இயக்குனர்கள் பாரதிராஜாஇ ஆர்.கே.செல்வமணிஇ தங்கர்பச்சான்இ அமீர்இ வெற்றிமாறன்இ வி.சேகர்இ ராம்இ சுப்பிரமணியம் சிவாஇ கவுதமன் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டி:
தமிழர்களின் நீராதாராம்இ வாழ்வாதாராம்இ விவசாயம் அனைத்தும் அழிக்கப்பட்டு இந்த மண்ணை பாலைவனமாக்கும் முயற்சிகள் நடக்கிறது.
தமிழகத்தின் வளங்களும்இ நிலங்களும் அழிக்கப்பட்டு உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுவதால் எந்த திசையில் திரும்பினாலும் நாளுக்கு நாள் போராட்டங்கள் வளர்ந்து ெகாண்ேட இருக்கிறது. எதற்காக போராடுகிறார்கள் என்பதை கவனிக்காமல் மேலும் மேலும் போராட்டக்காரர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன மத்தியஇ மாநில அரசுகள்.இனி தமிழ்நாட்டையும்இ தமிழ் மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்றால் கட்சிஇ மதம்இ ஜாதி அடையாளங்களை தாண்டி ஒன்றுபட்ட தமிழர் அமைப்பு ஒன்று அவசியமாகிறது.
அதற்காகவே நாங்கள் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை என்ற அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறோம். எந்த அரசியல் சார்பும் இல்லாமல் இந்த இயக்கம் செயல்படும்.
காவிரி பிரச்னை இருக்கும்போது அண்ணா பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக சூரப்பாவை நியமித்துள்ளனர். அவரை உடனடியாக திரும்ப பெற வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். காவிரி விவகாரத்தில் தமிழர்களுக்கான நியாயம் கிடைக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை மற்றும் கவர்னர் மாளிகையை மூடும் போராட்டம் நடத்தப்படும். தமிழ் இனத்துக்காகவும் காவிரி பிரச்னைக்காகவும் ஆயுதம் ஏந்தி போராடவும் தயங்க மாட்டோம். காங்கிரஸ்இ பாஜ இரண்டு கட்சிகளுமே மத்தியில் ஆட்சி புரிந்துள்ளன. இரண்டு கட்சிகளுக்குமே தமிழர்கள் மீது அக்கறை இல்லை என்றனர். கவர்னருடன் சந்திப்பு; திடீர் சாலை மறியல்செய்தியாளர்களை சந்தித்த பிறகு கவர்னரை சந்தித்த திரைப்பட இயக்குனர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மனு அளித்தனர். பின்னர் பாரதிராஜா நிருபர்களிடம் கூறும்போதுஇ ‘அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு கர்நாடகத்தை சேர்ந்த சூரப்பாவை நியமித்தது ஏன் என கவர்னரிடம் கேட்டோம்.
அவர்இ ‘இந்த பதவிக்கு 190 மனுக்கள் அகில இந்திய அளவில் பெறப்பட்டது. அவர்களில் 3 பேரில் இறுதி செய்யப்பட்டு அதில் இருந்து சூரப்பா தேர்வு செய்யப்பட்டார். இதில் எந்த அரசியலும் இல்லை’ என்று ஆளுநர் தெரிவித்தார். இதேபோல் இசைப்பல்கலைக்கு கேரளாவைச் சேர்ந்தவரும்இ அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கு ஆந்திராவை சேர்ந்தவரும் தமிழக அரசின் கவனத்திற்கு வராமலே துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டார்களா? இதற்கு தமிழக அரசே பொறுப்பு. எனவே பதில் கூற வேண்டும்’ என்றார். பின்னர் எழும்பூரில் திடீரென இயக்குனர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர்.