தவிசாளரை நியமிக்கும் நோக்கில் மஸ்கெலியா பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலை மற்றும் கல்வீச்சி தாக்குதல் தொடர்பான சம்பவம் குறித்து 38 பேருக்கு ஹட்டன் நீதிமன்றில் பீ.அறிக்கை சமர்பிக்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் வட்டாரத்திற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தெரிவித்தார் .
மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஆதரவாளர்கள் 19 பேருக்கும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் 19 பேருக்கும் மொத்தம் 38 பேருக்கும் எதிர் வரும் 25ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றில் அஜராகுமாறு நீதிமன்றினால் அழைப்பானை பிரப்பிக்கபட்டுள்ளது.
கடந்த 28 ஆம் திகதி புதன் கிழமை மஸ்கெலியா பிரதேச சபைக்கான தவிசாளரை தெரிவு செய்யும் நோக்கில் ஜக்கிய தேசிய கட்சியினை சார்ந்த ரஞ்சனி என்ற உறுப்பினர் வாக்களிப்புக்கு கலந்து கொள்ளாமை தொடர்பில் ஏற்பட்ட பதற்றநிலை காரனமாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஆதரவாளர்களும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் மற்றும் கல் வீச்சி சம்பவம் தொடர்பிலும் பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூரு விளைவித்தமை தொடர்பிலும் இந்த பீ.அறிக்கை ஹட்டன் நீதிமன்றில் சமர்பிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
இந்த மோதல் சம்பவம் தொடர்பில் கன்கானிப்பில் ஈடுபட்ட இரகசிய பொலிஸாரினால் குறித்த 38 பேரும் இனங்கானபட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸாரால் தெளிவுபடுத்தபட்டமைக்கமைய பீ.அறிக்கை சமர்பிக்கபட்டமை குறிப்பிடதக்கது.