7 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ஆளுநர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு
1. ஹேமகுமார நாணயக்கார – மேல் மாகாணம்
2. கே.சி.லோகேஸ்வரன் – வடமேல் மாகாணம்
3. திருமதி. நிலுக்கா ஏக்கநாயக்க – சப்ரகமுவ மாகாணம்
4. ரெஜினோல்ட் குரே – மத்திய மாகாணம்
5. மார்ஷல் பெரேரா – தென் மாகாணம்
6. எம்.பி.ஜயசிங்க – வடமத்திய மாகாணம்
7. பி.பீ.திசாநாயக்க – ஊவா மாகாணம்
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவும் இவ் பதவிப்பிரமாண நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.