ஒன்றுபடு தமிழா வென்று எடு !
துடிக்கின்றதே எம்மினம் ;
தவிக்கின்றதே நீருக்காய் !
காவிரித்தாய் வரவுக்காய் ;
கண்ணீரோடு போராட்டம் !
அடிபணியா எம்மினம் ;
அடங்கிடுமா அன்னியனிடம் !
வந்தாரை வாழ வைத்த தேசம் ;
வரண்டு கிடப்பதே சோகம் !
அன்று தீயிலே வெந்தது ஈழம் !
இன்று நீரின்றி வாடுது தமிழகம் !
தமிழனுக்கு ஏனிந்த அவலம் ;
தமிழா ஒன்றுபடு உன்னால் முடியும் !
அறம் காத்த தமிழினம் !
அரசாண்ட தமிழினம் !
அள்ளிக் கொடுத்த தமிழினம் !
அடங்கிப் போவதில் இல்லை நியாயம் !
படை திரட்டி பகை அழித்த பரம்பரை !
வீரத்திற்கு பெயர் போன தமிழர் படை !
வரலாற்றை மறந்திடுமா இளைய தலைமுறை ;
வீச்சோடு புறப்படு புதிய விதிவரை !
தமிழா வீச்சோடு புறப்படு புதிய விதி வரை!!
-வேலணையூர் ரஜிந்தன்
12.04.2018