தென்மாகாண ஆளுநராக பதவி வகித்த ஹேமகுமார நாணயக்கார மேல் மாகாண ஆளுநராகவும் மேல் மாகாண ஆளுநராக பதவி வகித்த சி.லோகேஸ்வரன் வடமேல் மாகாண ஆளுநராகவும் மத்திய மாகாண ஆளுநராக பதவி வகித்த நிலுக்கா ஏக்கநாயக்க சப்ரகமுவ மாகாண ஆளுநராகவும் வடமாகாண ஆளுநராக செயற்ப்பட்ட ரெஜினோல்ட் குரே மத்திய மாகாண ஆளுநராகவும் சப்ரகமுவ மாகாண ஆளுநராக பதவியாற்றிய மார்ஷல் பெரேரா தென் மாகாண ஆளுநராகவும் ஊவா மாகாண ஆளுநராக செயற்பட்ட எம்.பி.ஜயசிங்க வடமத்திய மாகாண ஆளுநராகவும் வடமத்திய மாகாண ஆளுநர் பி.பீ.திசாநாயக்க ஊவா மாகாண ஆளுநராகவும் பதவியேற்றுக்கொண்டுள்ளனர்.
கிழக்கு மாகாண ஆளுநராக காணப்பட்ட ரோஹித போகொல்லாகம தொடர்ந்து கிழக்கு மாகாண ஆளுநராக நிஜமிக்கப்பட்டுள்ளார். ஆனால்,வடக்கு மாகாண ஆளுநர் பதவி தொடர்ந்து வெற்றிடமாக விடப்பட்டுள்ளது. மேலும்,வடக்கு மாகாண ஆளுநராக காணப்பட்ட ரெஜினோல்ட் குரே மத்திய மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில்,வட மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவித்த லோகேஸ்வரனை வடமேல் மகாண ஆளுநராக நியமித்துள்ளனர்.இந்த நிலையில் புதிய ஆளுநராக எவர் நியமிக்கப்படுவார் என்று மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.