புத்தாண்டு காலங்களில் நீர் நிலைகளில் ஏற்படுகின்ற விபத்துக்களை குறைத்துக் கொள்ளுமாறு பொலிஸார் பொது மக்களிடம் கேட்டு கொண்டுள்ளனர்.
அண்மைக் காலமாக நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
தற்போது நிலவும் மழையுடனான காலநிலையை தொடர்ந்து ஏரி, கடல், குளம் மற்றும் நீர்வீழ்ச்சி போன்ற இடங்களில் திடீரென நீர் மட்டம் அதிகரிக்க கூடும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே அவ்வாறான இடங்களில் நீராடுவதை பொதுமக்கள் தவிர்க்குமாறு பொலிஸார் கொண்டுள்ளனர்.
ஆபத்தான இடங்கள் தொடர்பில் பொருத்தப்பட்டுள்ள எச்சரிச்கை பலகைகளில் உள்ள ஆலோசனைகளை பின்பற்றுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் 93 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கவனயீனம் காரணமாகவே இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த வாரம் 5 இளைஞர், யுவதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.