நீண்டு செல்லும் நகர்வு அகழிக்குள்ளால் நாங்கள் சென்றுகொண்டிருந்தோம். அகழியின் சில பகுதிகளில் சற்று உயரமான பகுதிகள் இருந்தன. அவற்றைக் கடக்கும்போது உருவத்தை வெளிப்படுத்தாமல் கடக்குமாறு எங்களின் முன்னால் துப்பாக்கியுடன் சென்ற போராளி குணமதன் தனது அறிவுறுத்தலை வழங்கிக்கொண்டே இருந்தான். அத்தகைய உயரமான இடங்களில் நாங்கள் குனிந்து நகராது உருவத்தை வெளிக்காட்டும் போது எங்களது நகர்வை எதிரியின் தொலைதூர அவதானிப்பு ஆட்கள்; அவதானித்து விடுவார்கள்.
போர் முகம்-01
https://www.uyirpu.com/?p=9738
தொடரும் …….
நன்றி.
மூலம்
– தாரகம்