நடப்பு பாராளுமன்ற அமர்வை நிறுத்தி புதிய பாராளுமன்ற அமர்வை ஆரம்பிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, நேற்று 12 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறையில் இருந்த பாராளுமன்ற அமர்வை நிறைவுக்கு கொண்டுவந்து புதிய பாராளுமன்ற அமர்வை ஆரம்பிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலே ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் எட்டாவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வுகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
அரசியல் யாப்பின் 70 ஆவது சரத்திற்கு அமைய பாராளுமன்றத்தின் முதல் அமர்வுகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் அடுத்த அமர்வை கூட்டும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.
இந்த இடைவெளிக்குள் பாராளுமன்றத்தில் எதுவித பிரேரணைகளையோ, வினாக்களையோ சமர்ப்பிக்க முடியாது. பாராளுமன்றத்தின் சகல செயற்பாடுகளும் முடிவுக்கு கொண்டு வரப்படும்.
இறுதியாக கடந்த 2009 ஆம் ஆண்டு மே 17 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.