திருகோணமலை கண்ணியா பகுதியில் உள்ள ஏழு வெந்நீரூற்றுக்கள் உள்ளூர் வாசிகள் மாத்திரமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடமும் பெரும் வரவேற்பைப்பெற்றது.
இது சாதாரணமாக வெந்நீரூற்றாக மாத்திரம் பார்க்கப்படாமல் இது ஒரு புனித தளமாக பார்க்கப்படுவதுடன், இதில் உள்ள நீரும் புனிதமாக போற்றப்பட்டும் பாவிக்கப்பட்டும் வருகின்றது.
எனினும் அண்மைக்காலமாக அப்பகுதிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளும், யாத்திரிகர்களும் அந்த தளத்தின் புனிதத்துவத்தை பேணுவதில்லை என அனைவராலும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
குறித்த நீரூற்றுக்களை பயன்படுத்துபவர்கள் அதனை அநாகரிகமான முறையில் பயன்படுத்துவதாகவும், தவறான அதன் அத்தியாவசியமும், தேவையையும் உணராமல் செயற்பட்டு வருவதாகவும் பல்வேறான விமர்சனங்கள் வெளியிடப்படுகின்றன.
அண்மையில் சமூக வலைத்தளங்களில் அதிகம் விமர்சிக்கப்ட்டு வந்த ஒரு புகைப்படம் இதற்கு உதாரணம், புனித நீரினை அலட்சியப்படுத்தும் ஒருவரும், புனித தளத்திற்கு அவமரியாதையாக உடையணிந்து வந்த இரு பெண்களின் புகைப்படமும் இவ்வாறு விமர்சிக்க்பட்டது.
தமிழர்களின் பூர்வீக வரலாற்று இடத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவது மன வேதனைக்குரியதும், விமர்சனத்திற்குரியதுமாகும்.