சித்திரை புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இன, மத, கட்சி, நிற பேதங்களை ஒதுக்கிவிட்டு எமது நாட்டிலுள்ள அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் முக்கியமான தேசிய நிகழ்வு சிங்கள, தமிழ் புத்தாண்டாகும்.
இயற்கை மற்றும் மனிதனுக்கிடையே காணப்படும் நெருக்கமான உறவினை அர்த்தமுள்ளதாக மாற்றியமைத்து, சூரியனை முதலாகக் கொண்ட இயற்கைக்கு நன்றிக் கடன் செலுத்தும், தேசிய ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை மேம்படுத்தும் சூரியத் திருவிழாவானது, புதிய எண்ணங்களுடனும் திடசங்கற்பத்துடனும் வாழ்வினைப் புதுப்பித்துக் கொள்வதற்குக் கிடைக்கும் அருமையான சந்தர்ப்பமாகும்.
இன, மத, கட்சி, நிற பேதங்களை ஒதுக்கி விட்டு எமது நாட்டிலுள்ள அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் முக்கியமான தேசிய நிகழ்வு சிங்கள, தமிழ் புத்தாண்டாகும். இனம், மதம், அந்தஸ்து எதுவாயினும் கலாசாரப் பல்வகைமையை ஏற்றுக் கொண்டு, அதற்கு மதிப்பளித்து, அனைவருடனும் சந்தோசமாகவும் சமாதானத்துடனும் வாழ்வதற்கு இந்தப் புத்தாண்டைப் புதியதோர் ஆரம்பமாக மாற்றியமைப்போம்.
நீண்ட காலமாக இந்த நாட்டு மக்களின் வாழ்வுடன் பின்னிப் பிணைந்து காணப்படும் புத்தாண்டுப் பழக்கவழக்கங்களில் அர்த்தத்துடன் பங்கு கொண்டு அந்தக் கலாசார உரிமையை எமது எதிர்கால சந்ததியினருக்குப் பரிசளிக்கவும் இதனை சந்தர்ப்பமாக மாற்றிக் கொள்வோம்.
வளமான தேசமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு சமாதானம், நல்லிணக்கம், சகவாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும், மகிழ்ச்சியான இனிய புத்தாண்டாக அமையட்டும் எனப் பிரார்த்திக்கிறேன் என பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.