இராணுவத்தளபதி மகேஸ் சேனாநாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
“இலங்கையில் நடைபெற்ற யுத்தம் பற்றி எதுவும் தெரியாத அமைப்புகள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் இலங்கையின் இராணுவம் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் பொய்யான தகவல்களை வழங்கி வருகின்றனர்.
இதனை சரிசெய்துகொள்ள சில காலம் எடுக்கும். இன்றும் பல்வேறு அரசியல் பிரச்சினைகளின் அடிப்படையில், இராணுவத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.