புங்குடுதீவு கலைப்பெருமன்றத்தின் ஏற்பாட்டில் கலைவாணர் கலை அரங்க திறப்பு விழாவின் முதலாம் ஆண்டு நிறைவு விழா இம்மாதம் 22 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணிக்கு வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் தலைமையில் புங்குடுதீவில் இடம்பெற உள்ளது. காலை மற்றும் மாலை என இரண்டு அமர்வுகளாக இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே யம் சிறப்பு அதிதிகளாக வைத்திய நிபுணர் ப.ஸ்ரீகிருஷ்ணா , பிரபல வர்த்தகர் செ .மகேந்திரன் மற்றும் தொழிலதிபர் சே .சந்திரலிங்கம் ஆகியோரும் , கௌரவ அதிதிகளாக பேராசிரியர் .பொ பாலசுந்தரம்பிள்ளை , கல்வி அமைச்சின் ஓய்வு நிலை மேலதிக செயலாளர் உடுவை .தில்லை நடராஜா , வைத்திய கலாநிதி த .சத்தியமூர்த்தி , வேலணை பிரதேச செயலாளர் எ.சோதிநாதன் , நியூ ரங்கனஸ் ஹோம் பில்டர்ஸ் செயலாளர் யாழ் .தர்மினி பத்மநாதன் , சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய பொருளாளர் எ. கைலாசநாதன் , வேலணை பிரதேச சபை உறுப்பினர்களான க.நாவலன், மற்றும் க. செந்தூரன் ஆகியோரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
நியூ ரங்கனாஸ் ஹோமோ பில்டர்ஸ் இந்த அனுசரணையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பொது மண்டபம் திறப்புவிழா , நினைவுக்கல் திரைநீக்கம் , ஆண்டுமலர் வெளியீடு , தையல் கணனி பயிற்சி நெறிகளில் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்குதல் என்பனவும் இடம்பெறவுள்ளன .
மேலும் , மாலை அமர்வு பிற்பகல் 3 மணிக்கு பேராசிரியர் கா. குகபாலன் தலைமையில் இடம்பெறவுள்ளது. இவ்வமர்வின் பிரதம அதிதியாக யாழ்.அரச அதிபர் நா.வேதநாயகன் கலந்து சிறப்பிக்க உள்ளார். அத்துடன் குழுநடனம், வயலின் இசை, சமூக நாடகம், மெல்லிசை நிகழ்வு, மற்றும் காலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. எனவே இக்கலை விழா நிகழ்வில் அனைவரையும் கலந்து சிற்ப்பிக்கும்படி கலைப் பெருமன்றத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.