சம்பந்தனுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ள நிலையில், இரா. சம்பந்தன் கூட்டு எதிர்க்கட்சிக்கு சவால் விடுத்துள்ளார்.
இந்நிலையில், கூட்டு எதிர்க்கட்சி கொண்டு வரும் நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்கொள்வதற்கு தாம் தயாராக இருப்பதாக இரா. சம்பந்தன் சவால் விடுத்துள்ளார்.
திருகோணமலையில் இன்று ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும பேசுகையில்,
“நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கின்றது. சாதாரணமாக எதிர்க்கட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படுவதில்லை.
அவ்வாறு நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்தால் அதற்கு முகம்கொடுக்க தயார்” என இரா. சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.